Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

சாரா அர்ஜுன் இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகின்ற குழந்தை நட்சத்திரம் ஆவார். சாராவின் தந்தை ஒரு இந்தி நடிகர் ஆவார் அவர் பெயர் ராஜ் அர்ஜுன். காலு, சப்ரி மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட பல இந்தி மொழி சினிமாக்களில் நடித்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அடுத்து தனது போட்டோக்களை வெளியிட்டு ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.இயக்குநர் பிரவால் ராமன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான 404 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய பேபி சாரா.6 வயதுக்கு முன்பிருந்தே பாலிவுட்டில் குறும்படம், வணிக ரீதியிலான விளம்பரங்கள் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

தெய்வ திருமகள் படத்திற்கு பின்பு சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இவரது படங்கள் இருந்துள்ளது.பேபி சாராவாக இருந்து தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் . ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

அந்நிலையில் இவர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது .