Latest Post

“இவருக்கு கிடைச்ச யோகத்தை பாருங்க..!! ” அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்த கில்லாடி நடிகர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! “நான் மகான் அல்ல படத்தில் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..??” இந்த பிரபல நடிகையா இது.. இளம் நடிகைகளுக்கு போட்டியா மாறிய நடிகை..!! வாயை பிளந்த ரசிகர்கள்..!!

அடேங்கப்பா.. விஜய்க்கு ஜோடியாக நடித்த அந்த நடிகையா இது..? அட என்ன இவங்க இப்படி ஆகிடாங்க..?

மதுர திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையை ஞாகபம் இருக்கா ? இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. சினிமாவுக்காக ரக்ஷிதா என்று பெயரை மாற்றி வைத்து கொண்டார். ரக்ஷிதா இவருடைய அப்பா கௌரி சங்கர் என்பவர் சினிமாவில் பிரபலமான சினிமாபோட்டோக்ராஃபர் ஆவார். மேலும், இவருடைய அம்மா மம்தா ராவ் அவரும் பிரபலமான நடிகை தான் .

இதன் மூலம் தான் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து உள்ளது . 2002 ஆம் ஆண்டு இயக்குனர் புனித் ராஜ்குமாரின் இயக்கத்தில் ‘அப்பு’ என்ற கன்னட படத்தின் மூலம் ரக்ஷிதா திரை உலகிற்கு வந்தார். பின் நடிகை ரக்ஷிதா அவர்கள் 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான ‘தம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .

இந்த படத்தில் வந்த ‘சாணக்கியா சாணக்கியா’ என்ற பாடல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள். மேலும், இந்த படத்திற்கு பின்னர் அவர் தமிழ் மொழி படங்களில் கிடைக்கவில்லை . தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நாகர்ஜுனா, ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தார் .

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார் . சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தவுடன் அரசியலில் இறங்கிறார் . பிறகு நடிகை ரக்ஷிதா கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் . திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்புக்கு டாட்டா சொல்லி விட்டார். பின் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டிலாகி விட்டார். மேலும்,இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஊதி போய் இருக்கிறார். மேலும், இவர் குண்டாக இருக்கும் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இது ரக்சிதாவா?? என ஷாக்காக்கி உள்ளார்கள்